கலாசாரம் அழிவடைகிறதா? மேம்படுத்தப்படுகிறதா?


கலாச்சாரம் என்பது சமூக வாழ்வின் மிகத் தெளிவான அம்சங்களின் பெரிய மற்றும் வேறுபட்ட தொகுப்புகளைக் குறிக்கும் ஒரு சொல். இது முக்கியமாக மதிப்புகள், நம்பிக்கைகள், மொழி மற்றும் தகவல் தொடர்பு முறைமைகள் மற்றும் மக்கள் பொதுவாகப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும், அவற்றை ஒரு கூட்டாகவும், குழு அல்லது சமுதாயத்தில் பொதுவான பொருட்களாகவும் வரையறுக்க பயன்படுத்தலாம். சமுதாயத்தின் சமூக கட்டமைப்பு மற்றும் பொருளாதார அம்சங்களிலிருந்து கலாச்சாரம் வேறுபட்டது.

கலாச்சாரமானது  மனித உறவுகள் கட்டற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறது. இதற்கு காரணம் யார்? ஆண்களா இல்லை பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன? சமூகமே அப்படித்தான் இருக்கிறதா அதனால் தனிமனிதர்கள் இப்படி மாறிவிட்டார்கள் எனலாமா? இல்லாவிட்டால் தனிமனிதர்களின் மாற்றங்கள் இப்போது சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வதா?

கலாச்சாரத்தை அடியோடு மாற்றத்தை தர வைக்கும் தவறான நடத்தைகளுக்கெல்லாம் மூலக்காரணம் நாகரீகம் என்ற பெயரால் நம் மக்கள் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதே. கலாச்சாரம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதிலேயே பலருக்குத் தெளிவிருப்பதாகத் தெரியவில்லை. கலாச்சாரம் என்றால்  மத அடையாளங்களென்றும், அவ்வாறான  மத அடையாளங்கள் எல்லாம் நம்பவேண்டிய அவசியம் இல்லாத  மூட நம்பிக்கை என்றும் பலருக்கு போதிக்கப் பட்டிருக்கிறது, தொடர்ந்து போதிக்கப்பட்டும் வருகிறது.

கலாச்சாரம் என்பது சமூகத்தை நல்வழியில் கொண்டுபோக உதவும் ஒரு வழிகாட்டும் முறையே ஆகும். வாழ்ந்து காட்டி வழிகாட்டும் முறை என்றால் மிகையில்லை. வாழ்க்கையில் மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே மனிதன் என்பவன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகளின் படி வழிவழியாக மக்கள் வாழ்வதையே கலாச்சாரம் என்றழைக்கப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் எல்லா மனிதர்களும்  அமைதியான முறையில் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடிந்தது. இவ்விதமான கட்டுப்பாடுகளை மீறிவாழ்வது சமூக விரோதமாகவும், கேவலமான ஒன்றாகவும் கருதப்பட்டதால் அக்காலத்தில் அப்படி மீறுபவர்கள் சமூகத்திலிருந்தே விலக்கிவைக்கப்படுவதும் நடந்தது. எனவே சமூகத்தில் ஒரு அமைதி நிலவியது.

ஆனால் இவையெல்லாம்  மேலைநாட்டு நாகரீகத்தினால்  கலாச்சாரம் என்பது இன்று பெரும்‌ பாதிப்படையும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

மனிதப் பெருங்கூட்டத்தின் முக்கியக் குற்றங்களை உண்டாக்கும் உணர்வுகளுக்கும் ஒரு கட்டுப்பாட்டை ஆழ்மனதில் பதிய வைத்தால் சமூகம் அமைதியாக இருக்கும் என்பதன் காரணமாகவே இவற்றை மூலக்கதையாகக் கொண்ட ராமாயணமும் மகாபாரதமும் காலங்காலமாக மக்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.

தற்காலத்தில் இளம் வயதினரை ஈர்க்கும் மனிதர்கள் சினிமா கதாநாயகனும் கதாநாயகியரும்தான். அவர்களுடைய நடை உடை பாவனைகளால் கவரப்படுபவர்கள் அவர்களைப் போலவே தங்களை பாவித்து வாழத்துவங்குவதை பார்த்திருப்போம். ஒரு படத்தைப் பார்க்கும் போது ஆண்கள் அந்தப்படத்தின் கதாநாயகனாக தன்னையே உருவகித்துப் பார்க்கிறான். பெண்கள் கதாநாயகிகளை உள்வாங்குகிறார்கள். காதல் காட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படியே வெளியே உள்ள மனிதர்களின் வெளிப்பாடும் அது போன்ற தருணங்களில் காட்சியளிப்பதை பார்க்க முடியும்.

இதுமட்டுமின்றி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை மேலைத்தேய கலாசாரங்களுக்குள்‌ தங்களை உள் நுழைத்து இப்போது அதிலிருந்து விடுபட முடியாமல் சிக்கித் தவிக்கும் ஒரு நிலையை கண்ணூடாக பார்க்க முடிகிறது. தாய் மொழி தமிழைக் கூட உச்சரிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகள், பூகோள மயமாக்கலினால் அதிகரித்த தொழில்நுட்பங்கள் அன்றாடம் வேலைக்காகவும் ஓடிக்கொண்டே இருக்கும் குடும்பத்தாரால் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூட அவர்கள் பிள்ளைகள் இன்னொருவரை எதிர்பார்க்கும் ஒரு நிலை கூட மேற்கத்தேய செல்வாக்கினால் ஏற்பட்ட விளைவு என்று தான் சொல்ல வேண்டும். 

பிறந்தநாள் விழாக்கள்  முதல் அனைத்து விதமான விழாக்கள் வரை புதிய புதிய நடைமுறைகளைச் செய்து வருகின்றனர். உதாரணமாக ஆரம்பத்தில் திருமண சடங்குகள் இடம்பெறும் வேளையில் குறித்த நாளிலே மணப்பெண் மற்றும் மணமகன் ஒருவரை ஒருவர் நேரில் மணமேடையில் பார்த்துக் கொள்வர் ஆனால் இன்று திருமணத்திற்கு முதல் நாள் pre shoot எனும் புதிய கலாசாரத்தை கொண்டு தற்போது பிரபலமாக அனைத்து திருமண நிகழ்வின் முதலில் இத்தகைய புகைப்பட தொகுப்பு இடம்பெற்று வருகிறது.

வளர்ச்சி கண்டு வரும் தொழில்நுட்ப துறையினால் நன்மைகள் இருந்தாலும் வெகுஜன ஊடகங்கள், சமூக ஊடகங்களினாலே அதிகளவான கலாசார சீரழிவுகள் இடம்பெறுகிறது.இணையவழி வன்முறைகள் தொடங்கி போதைப் பொருள் பாவனைக்கு  அடிமையாதல், தவறான பழக்கவழக்கங்களுக்கு உள்ளாதல், ஆடை அணிவது முதல் உணவு பாரம்பரியம் வரை அடிப்படையாகக் காணப்படும் அனைத்து விடயங்களிலும் கலாசாரமானது அழிவடைந்து செல்லும் ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. 

 சமூகத்தில் ஒரு பகுதி கலாசாரமானது அழிவு நிலைக்கு போனாலும் ஒரு பக்கம் வளர்ச்சி நிலையும் இருக்க தான் செய்கிறது.

சமய நிகழ்வுகள், பண்டிகைகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் என்பன இன்றும் கிராமங்களிலும் நகரங்களிலும் கோவில்கள், திருவிழாக்களில் பாரம்பரியம் பேணும் வகையில் இடம்பெறுகிறது. தங்களுக்கான கலாசாரங்களை பேணும் வகையில் இனம் சார்ந்தும் மதம் சார்ந்தும் பழைமையான பண்பாடுகள் அழிவடையாமல் பாதுகாத்து வருகின்றனர் உதாரணமாக ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு அனுமதி வேண்டி அணி திரண்டதை குறிப்பிடலாம். என்ன தான் நவநாகரீக ஆடைகள் என்று வந்தாலும் பண்டிகைகள், திருவிழாக்கள் ,  திருமண நிகழ்வுகள் என்றால் கலாசார முறையில் ஆடைகள் அணிந்து வரும் மரபு இன்று வரை இடம்பெறுகிறது.

அதேநேரம் கலாசாரமானது இன்னும் நம்மிடையே உள்ளது என்பதற்கு நாம் கொண்டாடும் பண்டிகைகள்,சடங்குகள்  என்பவையே ஆதாரங்களாக உள்ளது. 

கலாசாரம் என்பது ஒரு சமூகம் அல்லது சமூகக் குழுவைக் குறிக்கும் தனித்துவமான ஆன்மீக, பொருள், அறிவுசார் மற்றும் உணர்ச்சிபூர்வமானது என்று கூறலாம்.  இது கலைகள் மட்டுமல்ல, வாழ்க்கை முறைகள், மனிதனின் அடிப்படை உரிமைகள், மதிப்பு அமைப்புகள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. 

கலாச்சாரம் தான் மனிதனுக்கு தன்னைப் பற்றி சிந்திக்கும் திறனை அளிக்கிறது.  நம்மை குறிப்பாக மனிதர்களாகவும், பகுத்தறிவு மனிதர்களாகவும், விமர்சனத் தீர்ப்பு மற்றும் தார்மீக அர்ப்பணிப்பு உணர்வைக் கொண்டவர்களாகவும் ஆக்குகிறது.  கலாச்சாரத்தின் மூலம்தான் மனிதன் தன்னை வெளிப்படுத்துவதும், தன்னை உணர்ந்துகொள்வதும் ஆகும். 

அடையாளங்கள், அறிவு, நம்பிக்கைகள், மதிப்புகள், அணுகுமுறைகள் மற்றும் புரிதல் ஆகியவற்றின் சமூக உற்பத்தி மற்றும் பரிமாற்றம்  அத்துடன், பழக்கவழக்கங்கள், நெறிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், உடை, உணவு, மொழி, கலை, தொழில்நுட்பம், மதம் மற்றும் சடங்குகள் உட்பட வாழ்க்கை முறை;  நடத்தை, மரபுகள் மற்றும் நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் விதிமுறைகள்.  எனவே, கலாச்சாரம் என்பது ஊடகம் மற்றும் செய்தி - உள்ளார்ந்த மதிப்புகள், வழிமுறைகள் மற்றும் சமூக வெளிப்பாட்டின் முடிவுகள் 

 கலாசாரம் என்பது தனித்துவமானது. அதுவே எமது அடையாளம். அதனால் எமது சிறார்கள் எமது மூத்தவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவற்றை அவர்களிடம் இருந்து அறிந்து அவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் ‘எமது கலாசாரத்தின் ஒப்பற்ற அடிப்படைத் தத்துவங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல முயல்கின்ற அதேவேளையில் எமது கலாசாரத்தினதும் விழுமியங்களைப் பாதுகாப்பது பற்றிய பொதுமக்களின் புரிந்துணர்வையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

ஆகவே கலாசாரம் என்பது அதன் தனித்தன்மையில் இருந்து மாறாமல் அதற்கான அடையாளங்களை இழக்காத வகையில் அதன் அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

Lakshiga Kanesalingam 

Comments