Posts

Showing posts from August, 2022

ஜனநாயகம் எனும் சர்வாதிகாரம்

 ஜனநாயகம் எனும் சர்வாதிகாரம் மாறிவரும் உலகில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களான இந்த மனித விலங்குகள் நான் உட்பட இந்த உலகில் மாற்றத்தையே விரும்பும் ஒருவராக உள்ளேன். உலகின் எமது கருத்து மற்றும் சுதந்திரம் என்பன உச்ச நிலையில் எமது உரிமைகள் இருக்க வேண்டும் என்பது அனைவரினதும் நிறைவேறாத ஆசை என்றே கூற வேண்டும். அவ்வாறாக எவ்வாறானதொரு மாயைக்குள் சிக்கியுள்ளோம் என்பதை எனது கண்ணோட்டத்தில் வரைவதே இக் கட்டுரையின் நோக்கம். முதலில் உலகில் முதன்மையானதாவும் அனைவருக்கும் வேண்டிய ஒன்றாகவும் பார்க்கப்படுவது தான் ஜனநாயகம். நாம் பெறும் ஜனநாயகத்தின் ஊடாகவே பல வழியில் சர்வாதிகாரத்தை அனுபவிக்கின்றோம் என்பது நிதர்சனமான உண்மை எனலாம். அந்தவகையில் முதலில் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை பார்த்தோமானால் ஜனநாயகம் என்பது மக்களாட்சி என குறிப்பிடப்படுகிறது. அதாவது “ மக்களால் மக்களுக்காக நடாத்தப்பெறும் அரசாங்கம் “என வரைவிலக்கணப் படுத்தப் படுகிறது. மக்களால் மக்களுக்காக மக்களே நடாத்தும் ஆட்சி மக்களாட்சி என்று அமெரிக்கா குடியரசு தலைவர் ஆப்ரஹாம் லிங்கன் ஜனநாயகத்திற்கு வரையறை கூறினார். இன்று உலகில் பெரும்பாலான நாடுகளில் நடைமுறையில்