ஜனநாயகம் எனும் சர்வாதிகாரம்

 ஜனநாயகம் எனும் சர்வாதிகாரம்

மாறிவரும் உலகில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களான இந்த மனித விலங்குகள் நான் உட்பட இந்த உலகில் மாற்றத்தையே விரும்பும் ஒருவராக உள்ளேன். உலகின் எமது கருத்து மற்றும் சுதந்திரம் என்பன உச்ச நிலையில் எமது உரிமைகள் இருக்க வேண்டும் என்பது அனைவரினதும் நிறைவேறாத ஆசை என்றே கூற வேண்டும். அவ்வாறாக எவ்வாறானதொரு மாயைக்குள் சிக்கியுள்ளோம் என்பதை எனது கண்ணோட்டத்தில் வரைவதே இக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் உலகில் முதன்மையானதாவும் அனைவருக்கும் வேண்டிய ஒன்றாகவும் பார்க்கப்படுவது தான் ஜனநாயகம். நாம் பெறும் ஜனநாயகத்தின் ஊடாகவே பல வழியில் சர்வாதிகாரத்தை அனுபவிக்கின்றோம் என்பது நிதர்சனமான உண்மை எனலாம்.

அந்தவகையில் முதலில் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை பார்த்தோமானால் ஜனநாயகம் என்பது மக்களாட்சி என குறிப்பிடப்படுகிறது. அதாவது “ மக்களால் மக்களுக்காக நடாத்தப்பெறும் அரசாங்கம் “என வரைவிலக்கணப் படுத்தப் படுகிறது. மக்களால் மக்களுக்காக மக்களே நடாத்தும் ஆட்சி மக்களாட்சி என்று அமெரிக்கா குடியரசு தலைவர் ஆப்ரஹாம் லிங்கன் ஜனநாயகத்திற்கு வரையறை கூறினார். இன்று உலகில் பெரும்பாலான நாடுகளில் நடைமுறையில் இருப்பதும் அதிகமானவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் ஜனநாயகம் காணப்படுகிறது.

அதாவது இன்று உலகில் ஜனநாயக நாடுகள் கூடவும் மெல்ல மெல்ல சர்வாதிகாரத்திற்குள் வருவதையும் பல நாடுகள் ஜனநாயகம் என்று கூறு கொண்டு சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது. ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பின் பண்புகள் குறித்து பல நம்பிக்கைகள் உள்ளது. அவையாவன பல்லினத்தன்மை, கருத்து வேறுபாடு, பாலின சமத்துவம், சிவில் சமூகத்திற்கான இடம், ஊடக சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்ற விடயங்களை இவை இன்றைய ஜனநாயக நாடுகளில் எவ்வாறு செயலாற்றுகிறது/ நடைமுறையில் இருக்கின்றது என்பது பற்றி பார்த்தால்,

முதலில் பல்லினத்தன்மையை எவ்வாறு பார்க்கலாம் என்றால் பல இனங்கள் வாழும் நாடுகளில் அதிக சனத்தொகை கொண்ட இனப்பிரதிநிதியே பதவிக்கு வருவதுடன் தொடர்ச்சியும் அவ்வாறே அமைகின்றது. இவ்வாறு இருக்கையில் மற்றைய இனத்திற்கான ஜனநாயகம் மறுக்கப்படுகிறது குறிப்பாக இலங்கை அரசியலைக் கூறமுடியும்.

இதைப் போன்று உலகில் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் கூட 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்திய அரசு நிறைவேற்றிய “குடி மக்கள் சட்டம் “ மசோதா முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு அதிகமானதாக கருதப்பட்டது.

அடுத்ததாக ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பில் கொள்கை முடிவுகளை எடுப்பதில் மக்களின் கருத்துக்களைப் பெறுவது ஜனநாயகத்தின் மிகவும் முக்கியமானதாகும்.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அரசியல் அறிஞர்களின் கவனத்திற்கு வந்துள்ள முக்கியமான போக்கு என்னவென்றால் பொதுக் கூட்டங்களில் அரசியல் தலைவர்கள் வெளியிடும் சமிக்ஞைகள் தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்தவோ அல்லது கதைக்கவோ முடியும் என்பதாகும். சர்வாதிகார போக்குகளைக் காட்டும் இந்தியாவில் மோடியின் உரைகள் முஸ்லிம்களுக்கு எதிராக வழிநடத்தியது.

அமெரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்திமை என்பவற்றுடன் இலங்கையில் கோட்டபாய ராஜபக்ஷவை சிங்கள மக்களின் வாக்குகள் போதும் எனவும் சிங்கள மக்களுக்கானவன் என கூறிய விடயங்களை நோக்க முடியும்.

இவ்வாறான நிலைகள் உருவாகும் போது ஜனநாயகத்தை வைத்துக் கொண்டு சர்வாதிகாரத்தினுள் நுழையும் செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. இவற்றிலிருந்து மீண்டு வர வேண்டியது பிரதான விடயமாகும் இன்றைய காலத்தில்.என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

Lakshiga Kanesalingam 

Comments